27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட 500 கோடி வெள்ளி என்னவானது?

2021 பட்ஜெட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி திட்டத்திற்கு 500 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதி என்னவானது என்று ஜொகூர் பக்கிரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி யின் கேள்வி எழுப்பினார்.
தடுப்பூசி வாங்குவதற்கு 350 கோடி வெள்ளியும் தடுப்பூசி செலுத்தும் நிர்வாக பணிகளுக்கு 150 கோடி வெள்ளியும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. அப்படியானால் தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு முதலாளிகள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். தடுப்பூசி திட்டத்திற்கு 500 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக கிடைப்பதாகும்.
ஆனால் இன்று தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு தலா 30 வெள்ளி செலுத்த வேண்டிய நிலையில் முதலாளிகள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles