
கெபிமா இயக்கத்தின் தோற்றுநரும் ஆலோசகருமான முகமது பின் காதர் அலி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஹரி ராயா விருந்து உபசரிப்பு நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரும் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி சூழலில் இந்த புனித பெருநாளை கொண்டாடினர்.

நிகழ்வில் உரையாற்றிய முகமது பின் காதர் அலி, “நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும். இல்லாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வோம். அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் துவா செய்வோம்,” என்றார்.

இந்த ஹரி ராயா விருந்து நிகழ்வு, சமூக ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் பரஸ்பர அன்பை வலியுறுத்தும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது.
