
தனக்கு எதிரான அரசாங்கத்தின் RM1.69 பில்லியன் வரி உரிமைகோரல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்துவதில் முனஞ பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), முன்னாள் பிரதமருக்கு எதிரான திவால் அறிவிப்பைத் தொடரலாம்.
இந்த முடிவைக், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பாச்சே மின்னஞ்சல் மூலம் நஜிப் மற்றும் எல்.எச்.டி.என்.-ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுப்பியது.
எல்.எச்.டி.என். வழங்கிய பிப்ரவரி 4ஆம் தேதியிட்ட அந்த நோட்டீஸ், தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, நீதிமன்ற நடவடிக்கைகளைத் துஷ்பிரயோகம் செய்வதோடு, அடக்குமுறை அடிப்படையிலான என்று கூறி முன்னாள் பிரதமர் அந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
இந்த அறிவிப்பு, தனது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கில் ஓர் அரசியல் சதி தந்திரம் என்றும் அவர் கூறினார்.
