
பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் பலவீனம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் குறை கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றுதான் கெஅடிலான் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்து இஷாமுடின் கருத்து தெரிவித்தது இல்லை.
நாட்டின் அடுத்தபிரதமர் ஏற்பார் என்று கூறப்பட்ட இவர் இப்போது திடீரென குறை கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சம்சுல் இஸ்கந்தார் கூறினார்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் கடந்தகால தவறுகளை அரசாங்கம் உணர வேண்டும் என இஷாமுடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
