27.9 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

சிறுதொழில் வணிகர்களுக்கு உதவ ஹிஜ்ரா சிலாங்கூர் 8 கோடி வெள்ளி ஒதுக்கீடு

நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானத்தை இழந்திருக்கும் சிறுதொழில் வணிகர்களுக்கு உதவ Yayasan Hijrah Selangor எட்டு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி ஹிஜ்ரா சிலாங்கூருக்கு எட்டு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தார்.
வர்த்தகத்தை புதிதாக தொடங்கும் சுமார் 8,000 தொழில் முனைவோர்களுக்கு தொடக்க மூலதன நிதியாக வழங்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவால் வேலை இழந்தவர்கள் மற்றும் வருமான இழப்பிற்கு ஆளானவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.


இதனிடையே ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு 8 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் வரவேற்றார்.
இந்த கடனுதவியை பெறுவதற்கு சிலாங்கூர் மாநில இந்திய சிறுதொழில் வணிகர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
வருமானத்தை இழந்திருக்கும் சிறுதொழில் வணிகர்களுக்கு உதவ இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில இந்தியர்கள் இதில் வீடு படக்கூடாது. ஆகவே ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவிக்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் மேல் விபரங்களுக்கு ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வாகிகளில் ஒருவரான தீபன் சுப்பிரமணியத்தை 016-3471952 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles