29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கிள்ளான் பள்ளத்தாக்கு பரபரப்பு: திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் சிக்கியது!

🔥 Views : 1,713
👁 Reading Now : 35

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 8 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஜாலான் அவான் கெசில், தாமான் OUG, ஜாலான் கூச்சாய் லாமா மற்றும் கோலாலம்பூர்–சிரம்பான் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் இருந்து அவசர அழைப்புகள் பெறப்பட்டன.

ஜாலான் அவான் கெசிலில் மட்டும் 5 வாகனங்கள் சிக்கியுள்ளன. அதேவேளையில், ஜாலான் கூச்சாய் லாமாவில் 2 வாகனங்கள் சிக்கியுள்ளன. மேலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் ஒரு வாகனம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ளம் எப்படி ஏற்பட்டது? வடிகால் பிரச்சினையா அல்லது கனமழையா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles