31.3 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

மலாக்கா கல்வி புரட்சி! ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘கல்வி யுத்தம்’

🔥 Views : 3,225
👁 Reading Now : 51

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் “கல்வி யுத்தம்” திட்டம், மலாக்கா மாநில மாணவர்களிடையே பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்தும் என அதன் இயக்குநர் சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

44 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், நாட்டில் மிகப்பெரிய கல்வி மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதுவரை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இந்த கல்வி இயக்கம், “கல்வி அனைவருக்குமான உரிமை” என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

மாணவர்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே “கல்வி யுத்தம்” திட்டம் தொடங்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது மலாக்காவிலும் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலாக்கா மாநிலத்தில் தற்போது மூன்று இடங்களில் ஸ்ரீ முருகன் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அது மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, மலாக்கா மாநில “கல்வி யுத்தம்” திட்டத்தை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி. சண்முகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. – Nambikkai

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles