27.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மாஸ்டா காரில் பெண்ணை குத்திய நபர் கைது!” – இன்று விளக்கமறியலில் ஆஜர்!

🔥 Views : 3,772
👁 Reading Now : 47

ஒரு உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மாஸ்டா 3 காரில் பெண்ணை கத்தியால் குத்தியதாக தேடப்பட்டு வந்த 32 வயது ஆண் ஒருவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோத்தா ஸ்டார் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் சையத் பஸ்ரி சையத் அலி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், அவர் இன்று விளக்கமறியலில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார்.

நேற்று இரவு வெளியான தகவலின்படி, 35 வயதான பெண் அரசாங்க ஊழியர் ஒருவர், தனக்குத் தெரிந்த நபரால் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்த பெண் சுல்தான் பகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ஆபத்தான ஆயுதத்தை பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் சட்டம் பிரிவு 326ன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles