27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

94 பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மலேசிய பாஸ்போர்ட்!” – ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது!

🔥 Views : 1,088
👁 Reading Now : 29

நாட்டின் அடையாள ஆவண பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசிய பாஸ்போர்ட் ஜூன் 1ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாக குடிவரவு துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷபான் அறிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில், இந்த புதிய பாஸ்போர்ட் நான்கு அலுவலகங்களில் வழங்கப்படும். அவை புத்ராஜெயா குடிவரவு தலைமையகம், ஜாலான் டூட்டா கோலாலம்பூர் பாஸ்போர்ட் அலுவலகம், UTC வாங்சா மஜு மற்றும் ஷா ஆலம் குடிவரவு அலுவலகம் ஆகியவையாகும்.

புதிய பாஸ்போர்ட் படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஜூலை மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“முன்னதாக எங்கள் பாஸ்போர்ட்டில் 49 பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன. புதிய பதிப்பில் அது கிட்டத்தட்ட இருமடங்காக 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,” என்று ஜகாரியா கூறினார்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களில் மேம்படுத்தப்பட்ட ஹாலோகிராம், UV அச்சிடுதல், மறைக்கப்பட்ட காட்சி கூறுகள் மற்றும் பல்வேறு தடயவியல் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பாஸ்போர்ட் புத்தகத்தை இணைக்கும் நூலுக்குக் கூட தனித்துவமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கமும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

2025ஆம் ஆண்டுக்கான குடிவரவுத் துறையின் சிறந்த சேவை விருதுகள் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட்கள் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

புதிய அம்சங்களைக் காரணம் காட்டி பொதுமக்கள் அவசரமாக பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles