27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

18 வயது தம்பியைக் கொலை செய்த அண்ணன் மற்றும் 4 நண்பர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது!

🔥 Views : 2,993
👁 Reading Now : 21

தஞ்சோங் ரம்புத்தானில் தனது 18 வயது தம்பியைக் கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், 22 வயது அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் மீது ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

22 வயது SK Siri Sakti Vell மற்றும் 24 முதல் 36 வயதுக்குட்பட்ட K Thirucelvan, Shashipal Singh Manmuhan Singh, N Thaneshwaran, P Ukenthiran ஆகிய அவரது நான்கு நண்பர்களும், தம்பி Kerisnan என்பவரைக் கொலைச் செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 12-ஆம் தேதி அதிகாலை, தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அருகே இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரிடமிருந்தும் எந்தவொரு வாக்குமூலமும் இன்றுச் பதிவு செய்யப்படவில்லை.

மருத்துவ மற்றும் தடய அறிவியல் அறிக்கைகளுக்காக, இந்த வழக்கின் மறுசெவிமெடுப்பு வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles