
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் , “Legasi Jasa Sanjungan Budi, Julangan Jasa” என்ற விருதை வழங்கி தன்னை கௌரவித்த செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு (MPS) தனது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இந்த விருது தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதாக கூறிய அவர், செந்தோசா சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்கும் முன்பு எட்டு ஆண்டுகள் MPS-இல் பணியாற்றிய அனுபவம் இருப்பதாக நினைவுகூர்ந்தார்.
“அங்கு பணியாற்றிய காலத்தின் பல நினைவுகள், அனுபவங்கள் மற்றும் MPS ஊழியர்களின் அர்ப்பணிப்புகள் என்றும் மறக்க முடியாதவை,” என்று அவர் கூறினார்.
மேலும், சிலாங்கூர் மந்திரி பெசார் யாப் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தனது ஆதரவு, நம்பிக்கை மற்றும் பாராட்டுகளுக்காக அவர் நன்றியைத் தெரிவித்தார்.
“இந்த அங்கீகாரம், மக்களுக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் தொடர்ந்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்யும் ஊக்கமாக இருக்கும்,” என்று டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.



