34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி

🔥 Views : 8
👁 Reading Now : 58

ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கொரோனா வேகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.
தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைக்கு விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து செல்வதற்கு தடைவிதித்துள்ளது மே 15-ந்தேதி வரை இந்தத் தடை நீடிக்கிறது.
தடையை மீறினால் சிறைத்தண்டனைக்கு உள்ளாவீர்கள் என எச்சரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் சில ஆஸ்திரேலியா வீரர்கள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தங்களை சிறப்பு வாடகை விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தற்போதைக்கு சிறப்பு வாடகை விமானம் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு அழைக்கும் திட்டமில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles