34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா?

🔥 Views : 9
👁 Reading Now : 41

ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் உள்ள ஆறு நகரங்களில் நடக்கிறது. முதற்கட்டமான சென்னை, மும்பை வான்கடே மைதானங்களில் நடைபெற்றது. தற்போது அகமதாபாத், டெல்லி மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் கிரவுண்ட்மேன்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்திலும் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles