29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சம்ரி வினோத் விவகாரம்!போலீஸ்,அரசுக்கு எதிராக வழக்கு

🔥 Views : 10
👁 Reading Now : 63

சமயத்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்ட சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காக அரசு மற்றும் போலீசுக்கு எதிராக இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
மலேசிய இந்து தர்ம மாமன்றம் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மலேசிய இந்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள இந்துக்களை சிறுமைப்படுத்தும் வகையில் சம்ரி வினோத் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரின் இந்த செயல் இந்துக்களின் உணர்வுகளை பெரிதும் பாதித்துள்ளன.
இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 800க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
ஆனால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மலேசிய இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு மலேசியஇந்து தர்ம மாமன்றம் மற்றும் மலேசிய இந்து இளைஞர் இயக்கத்துக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராதாகிருஷ்ணன், அருண்குமார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles