29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

வேலாயுதத்தின் குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை! விசாரணை தேவை

🔥 Views : 9
👁 Reading Now : 22

தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ என்னும் நிகழ்ச்சி வாயிலாகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதை பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் மிகக்கடுமையாக கருதுகிறது என்று அதன் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்
மலேசியத் தமிழ் உணவக உரிமையாளர் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவரது அந்தப் பேட்டியின் அடிப்படையில் அது பொய் என்றும் தட்டிக் கழிக்க முடியாது. இதற்கு முறையான விசாரணையே தீர்வு என்று சுரேஷ் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களை மோசமானவர்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பது.
வேலாயுதம் சொன்ன தகவலை வைத்து, பெட்டாலிங் ஜெயாவில் அந்த உணவகம் எங்குச் செயல்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
அந்தப் பேட்டியை வழிநடத்திய ஊடகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி இன்னும் விவரங்களைச் சேகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.


இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், அதற்கு நடவடிக்கை அவசியம் தேவை என்றும் சுரேஷ் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles