
நாட்டில் இளம் பட்டதாரிகளை உருவாக்குவதில் ஒரு முன்னோடி பல்கலைக்கழகமாக சைபர்லின்க் அனைத்துலக பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் ஃபுட்பால் அகாடமி எனப்படும் கால்பந்து பயிற்சியும் இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.
சைபர்லின்க் அனைத்துலக பல்கலைகழகத்தில்
கால்பந்து பயிற்சி முகாமில் இணைய இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று மார்க்கெட்டிங் மேனேஜர் ராஜ்குமார் தெரிவித்தார்.
டத்தோ நாதன் தலைமைத்துவத்தில் சைபர்லின்க அனைத்துலக பல்கலைக்கழகம் வெற்றி நடைபோடுகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் அதில் ஒரு சிறப்பு பாடமாக கால்பந்து பயிற்சி அகாடமியும் இடம் பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.
புஞ்சா ஆலாமில் ஃபுட்பால் அகாடமியையும் இந்த பல்கலைக்கழகம் கொண்டிருக்கிறது.
தற்போது 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த காலபந்து பயிற்சி திட்ஞத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டில் இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் முயற்சியாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மூன்று மாதம் இலவசமாக தங்கும் விடுதியும் மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது
கல்வியுடன் விளையாட்டையும் ஒரு பகுதியாக இணைத்து மாணவர்களுக்கு இந்த கால்பந்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பதோடு வருங்காலத்தில் அவர்கள் பல மாநில குழுக்களளை பிரதிநிதிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்றார் அவர்.
தேர்வில் தோல்வி கண்ட மாணவர்கள் மனம் தளராமல் இந்த பயிற்சித் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அவர்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
இதனிடையே இந்த கால்பந்து பயிற்சித் திட்டத்தில் அதிகளவில் இந்தியர்கள் பங்கேற்பதை வரவேற்கிறோம் என்று ராஜ்குமார் தெரிவித்தார்.
தொடர்புக்கு ராஜ்குமார் 017-2268282 மற்றும் மகேஸ் 016-6866609.
www.cyberlynx.edu.my
