25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வணிகரிடம் கொள்ளையிட்டதாக ’36’ கும்பல் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

🔥 Views : 6
👁 Reading Now : 61

54 வயது வணிகர் ஒருவரை பாரங்கத்தி முனையில் மடக்கி சுமார் 5 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருட்களை கொள்ளையிட்டதாக 36 கும்பலைச் சேர்ந்த நான்கு இந்திய ஆடவர்கள் மீது இன்று மலாக்கா ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.எம்.ஜெயமுருகன் 37 ,எம்.முரளி 32 ,ஏ,இராஜேந்திரன் 35 மற்றும் கே.அன்பு கனியன் 26 ஆகிய நால்வரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.கடந்த ஜூன் 5 ஆம் தேதி இரவு 10 .30 மணியளவில் கிளேபாங் பெசார்-கிச்சில் என்ற இடத்தில் இவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் வாசிக்கப்பட்டது.இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles