
கோவிட் – 19 நோய் தடுப்பு திட்டத்தில் பினாங்கு அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள்,செயலாக்கங்கள் யாவும் மன நிறைவை தருவதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.
கோவிட் -19 சம்பவங்களை துடைத்தொழிக்க நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வரும் மாநில முதல்வருக்கும் மற்றும் பினாங்கு அரசாங்கத்திற்கும் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
நேற்றுக் தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி கோல்ப் ரிசோட்டில் நடைபெற்ற பிகாஸ்- பிபிவி எனப்படும் பொது மற்றும் தனியார் துறைக்கான கோவிட் -19 தொழில் நோய் தடுப்பு திட்ட நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் அவர் பேசினார்.
பத்து காவான் தொழில் பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் 21 தொழில்துறை நிறுவனங்களில் வேலை செய்து வரும் சுமார் 16 ,000 தொழிலாளர்களுக்கு,இத்திட்டத்தின் வழி தடுப்பூசிகளை செலுத்த முடியும் முடியும் என அஸ்மின் அலி கூறினார்.
