
காரைக்குடி,
செய்தி / படங்கள்:எம். முருகன்
சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியின் இயக்குநர் சேது பாஸ்கருக்கு ‘கண்ணதாசன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில், நீதியரசர் சொக்கலிங்கம் இந்த விருதை சேது பாஸ்கருக்கு வழங்கி சிறப்பித்தார். கண்ணதாசனின் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளையும் அவரது படைப்புகளின் சிறப்பையும் போற்றும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சேது பாஸ்கர், “கண்ணதாசன் தனது பாடல்கள் மூலம் இலக்கியம், கவிதை மற்றும் தமிழின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரைப் போன்ற ஓர் அற்புதமான கவிஞரை காண்பது அரிது. அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்,” என்று தெரிவித்தார்.மேலும், கண்ணதாசனின் பெயரில் தனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது பெருமையளிப்பதாகக் கூறிய அவர், விருதை வழங்கி கௌரவித்த விழா ஏற்பாட்டாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். கண்ணதாசன் நூற்றாண்டு விழா இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.



