28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

பூக்கடை வியாபாரத்தை தொடங்கியவருக்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதமா ?

🔥 Views : 9
👁 Reading Now : 36

பூ வியாபாத்தை தொடங்கலாம் என அரசாங்கம் அறிவித்து விட்டது என்ற தகவல் வெளியானப் பிறகு,மகிழ்ச்சியுடன் கடையை திறந்து நடத்தியவருக்கு 10 வெள்ளி அபராதத்தை விதித்த அரசாங்கத்தின் நடவடிக்கையில் பூ வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுபாங் நகரில் பூ வியாபாரி ஒருவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
பூ ஒரு முக்கியமான பொருள் அல்ல என்பதை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசாங்கமோ அல்லது அமைச்சரவோ அறிக்கை வெளியிட்டிருந்தாலும்,பூ வியாபாரத்தை நடத்துவதற்கு முறையாக அரசாங்கத்தின் அனுமதிக் கடிதம் தேவையா?இல்லையா ?என்பதும் புரியாமல் உள்ளது.
இதனால் பூக்களை வாங்கி குவித்து வைத்திருக்கும் வியாபாரிகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதோடு,கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக உள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles