25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பெண்களின் பலவித ஆடைகளை திருடி வந்த ஆடவன் கைது!

🔥 Views : 5
👁 Reading Now : 20

பெண்களின் பலவித மான ஆடைகளை திருடி வந்த ஆடவன் ஒருவனை போலீஸார் கைது செய்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பக்குருடின் தெரிவித்தார்.
பண்டார் சன்வே ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இந்த ஆடவர் 58 பெண்களின் ஆடைகளை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெண்களின் உள்ளாடைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்த ஆடவர் தனது ஆடைகளை திருடியதை பார்த்து பெண்மணி ஒருவர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த ஆடவனின் வீட்டில் பரிசோதனை செய்தபோது 58 பெண்களின் ஆடைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் உள்ளாடைகளும் அடங்கும்.
இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles