
நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் கடந்த புதன் கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
மலாய் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்திய பின்னர் மாமன்னர் இந்த ஆதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட்டில் சிலாங்கூர் சட்டமன்றத் தொடரை கூட்டுவது தொடர்பில் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடம் அனுமதி கோரவுள்ளார்.
இதன் தொடர்பில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் அவர்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் கூறினார்.
