29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மைக்கலுக்குத் தீக்காயம் பட்டது உண்மையே! விசாரணைக்காக ஊழியர் ஒருவர் கைது!

தமிழகத் தொழிலாளர்கள் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், இந்தியத் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தமிழ் நாட்டுத் தொழிலாளர் வேலாயுதம் ஆகியோரோடு நேரடி கலந்துரையாடல் இணையம் வழி நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தியதில், உணவக நிர்வாகம் முறையாக வேலாயுதத்திற்குச் சம்பளம் கொடுத்த ஆவணங்களை வைத்துள்ளனர். இருந்தபோதும், ஏஜெண்ட் வாயிலாக அனுப்பப்பட்ட பணத்தில், என்ன கோளாறு என்பது தெரியவில்லை. இருப்பினும் அவருக்குச் சேரவேண்டிய பணத்தை நிர்வாகம் மூலமாகவும், அமைச்சு மூலமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
வேலாயுதம் குற்றஞ்சாட்டியபடி மைக்கல் என்பவர், துன்புறுத்தப்பட்டது உண்மையா? என்கிற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த வகையில் மைக்கலுக்குத் தீக்காயம் விளைவிக்கப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


ஆனால், தீக்காயம் விளைவித்தவர் இன்னொரு உழியர் என்றும், அவரை நேற்று அரச மலேசிய போலீஸ் படை கைது செய்து விசாரித்து வருவதாகவும் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
பாலியல் கொடுமை நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என தெரிவித்த டத்தோ ஸ்ரீ சரவணன், தற்போது மைக்கல் நலமாக இருக்கிறார் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles