27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

தந்தையர்களை போற்றும் வகையில் கவிமாறனின தந்தையர் தின பாடல்!

உலகம் முழுவதும் தந்தையர்களின் தியாகங்களையும், பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நாளை தந்தையர் தினம் கொண்டாடப்படும் வேளையில் நாட்டில் புகழ் பெற்ற அறிவிப்பாளர், கலைஞர் என்று புகழப்படும் கவிமாறனின் தந்தையர் தின பாடல் இப்போது யூட்டிபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


பெற்று வளர்த்து பேணிக் காக்கும் தாயின் அர்ப்பணிப்புக்கு உலகத்தில் எதுவும் ஈடாகாது. என்றாலும், பின்னணியில் இருந்து நம்மையறியாமல் நம்மை இயக்கி, நமக்காக உழைக்கும் தந்தையரின் சேவைகளையும் தியாகங்களையும் நாம் மறந்து விட முடியாது.
பிள்ளைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் உடலை வருத்தி எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் தந்தை.
அந்தத் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கவிமாறனின் தந்தையர் தின பாடல் நமது உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.
தந்தையை போற்றும் வகையில் அற்புத வரிகளுடன் பாடலை வெளியிட்டிருக்கும் கவிமாறனனை ஏ எஸ் டி எனப்படும் ஆசியா தமிழ் செய்தி நிறுவனம் மனதார வ்ழ்த்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles