
ஐந்து ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு,பேரா தைப்பிங் உலு துப்பாய் என்ற இடத்தைச் சேர்ந்த இந்தியக் குடும்ப மாது 55 வயது செ.சரஸ்வதி என்பவருக்கு நிலப்பட்டா கிடைத்தது. நீண்ட காலமாக இந்த இடத்தில் ஏறக்குறைய 200 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும்,இவர்கள் அனைவருக்கும் பிபிஆர் வீடுகள் கிடைக்கப் பெற்று,அனைவரும் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.அப்போது குடும்ப மாது சரஸ்வதியின் வீடு அமைந்திருந்த இடம் சில நிலப்பிரச்சனை பிரச்னை இருந்ததால் அவருக்கு பிபிஆர் வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் இப்பிரச்சனையை சுங்கை துப்பாய்
மஇகா கிளைத் தலைவர் வரதன் நாச்சிமுத்து முன்னிலை எடுத்தார். இவருக்கு எப்படியாவது நிலபட்டாவை பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில்,இதே பகுதியில் சில நபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட முயற்சியில்,இன்று வெற்றி கிட்டியுள்ளது.வழங்கப்பட்டுள்ள நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவதற்கு சில நல்லுள்ளங்களின் உதவியையும் நாடியிருப்பதாக சீர்மிகு இந்து சமூகநல சங்கத்தின் தலைவருமான அவர் கூறினார்.
