29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

MITI கடிதம் இல்லை உணவகத்திற்கு 10,000 வெள்ளி அபராதம்

File Picture

மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் மிட்டி எனப்படும் அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சின் கடிதம் இல்லாமல் உணவகத்தை திறந்ததற்காக 10,000 வெள்ளிஅபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுங்கை பூலோவில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்திற்கு ஜூன் 17ஆம் தேதி 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் அப்துல் முத்தாஹிர் வேதனையுடன் தெரிவித்தார்.
உள்நாட்டு வாணிப அமைச்சின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த அபராதத்தை விதித்தனர்.
மிட்டி கடிதம் இல்லாமல் உணவகத்தை திறந்ததாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
உணவகங்கள் மிட்டி கடிதம் இல்லாமல் வியாபாரத்தை நடத்தலாம் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது.
ஆனால் இப்போது மிட்டி கடிதம் இருக்கவேண்டுமென கூறப்படுவது பெரும் குழப்பமாக இருக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles