29.2 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

தடுப்பூசிகளை விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

🔥 Views : 36
👁 Reading Now : 22

இணையம் வழி தடுப்பூசிகள் விற்பனை தொடர்பில் நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகள் போலியானவை அல்லது அங்கீகரிக்கப்படாதை. இந்த தடுப்பூசிகள் தரத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று அமைச்சு கூறியது.
தற்போதைக்கு தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகத்து வருகிறது. இணையம் உள்பட வேறு எந்த வகையிலும் தடுப்பூசிகளை விநியோகிக்க அல்லது விற்க அனுமதிக்கப்படவில்லை என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
பொறுப்பற்றத் தரப்பினரின் மோசடி வலையில் சிக்கி ஏமாந்து விடவேண்டாம் என்றும் பொது மக்களை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles