28.3 C
Kuala Lumpur
Sunday, August 16, 2026

Vetri

தந்தையின் தியாங்களை போற்றுவோம்

🔥 Views : 34
👁 Reading Now : 49

உலகம் முழுவதும் தந்தையர்களின் தியாகங்களையும், பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இன்று கொண்டாடப்படும் தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ம இ கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பெற்று வளர்த்து பேணிக் காக்கும் தாயின் அர்ப்பணிப்புக்கு உலகத்தில் எதுவும் ஈடாகாது.
என்றாலும், பின்னணியில் இருந்து நம்மையறியாமல் நம்மை இயக்கி, நமக்காக உழைக்கும் தந்தையரின் சேவைகளையும் தியாகங்களையும் நாம் மறந்து விட முடியாது.
தாயார் நமது கண்கண்ட தெய்வம் என்றாலும், நமது கண்ணுக்குத் தெரியாத விதமாக ஒவ்வொரு தந்தையும் ஏதோ ஒரு வேலையில், தொழிலில் ஈடுபட்டு தனது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் உடலை வருத்தி எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தாய் பத்து மாதங்கள் சுமக்கிறாள், தந்தையோ வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளை மனங்களில் சுமக்கிறார் என்று கூறுவார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles