26.3 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதி கொடுங்கள்!

🔥 Views : 65
👁 Reading Now : 62

வேலை இல்லாமல் வருமானமின்றி தவிக்கும் முடிதிருத்தும்
நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென
பினாங்கு மருத்துவர் சங்கம் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
பிகேபி 3 .௦ முழு முடக்கத்தால் வருமானமின்றி அவதியுறும் தங்கள்
உறுப்பினர்களின் நிலைமையை அறிந்து,மீண்டும் கடைகளை திறப்பதற்கு
அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டுமென சங்கத்தின்பொருளாளர்
வி.தர்மராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முடிதிருத்தும் நாளையங்களைநடத்தும் எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் பி40 சேர்ந்தவர்களாவர்.முடி திருத்தும் சேவை சமூகத்தில் முக்கியமானது என கருதப்படுவதால்,தேசிய
பாதுகாப்பு மன்றத்தின் மூலம் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டுமென
அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் இது நாள் வரை நாட்டில் உள்ள அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் மூடப் பட்டிருப்பதால் அதன் உரிமையாளர்கள், தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles