
தந்தை என்பவர் எண்ணிலடங்கா தியாகங்களை செய்பவர். தன்னுடைய கஷ்டங்களையும் தியாகங்களையும் வழிகளையும் எப்போதும் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாதவர். குறிப்பாக குடும்பத்தாரிடம் எப்போதும் சிரித்த முகத்தோடும் அன்பையும் மட்டுமே வெளி காட்டுபவர். நம்முடைய பாசத்திற்குரிய குடும்பத்திற்காக எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பவர். உங்கள் தந்தையரை வாழும்போதே வாழ்த்தி விடுங்கள்.
வயதான காலத்தில் அவருக்கு வழித் துணையாக இருங்கள். தயவுசெய்து ஒரு போதும் நம்முடைய உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடிப்போன தந்தையரை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ்
