26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் படுதோல்வி ! டத்தோஸ்ரீ அன்வார் சாடினார்

🔥 Views : 6
👁 Reading Now : 20

நாட்டு மக்களுக்கு நோய்த்தொற்று தடுப்பூசியை போடுவதில் தற்போதைய பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் படுதோல்வி கண்டிருப்பதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
மக்களுக்கு தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கவில்லை.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும் ஏமாற்றமே தருகிறது என்று இன்று கெஅடிலான் தேசியப் பேராளர் மாநாட்டை இணையம்வழி தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார் நாட்டு மக்கள் இன்னமும் நோய்த்தொற்று தாக்கத்தினால் பெருமம் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். பொருளாதாரமும் பெருமளவில் பாதித்து விட்டது.
மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி அவதிப்படுகிறார்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் தடுப்பூசியை வழங்குவதில் படு தோல்வி கண்டிப்பதாக அவர் சாடினார். ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் மரண எண்ணிக்கையும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles