
தமிழ்ப்பள்ளிக்கு 2 தங்கப்பதக்கம்இயங்கலை வாயிலாக இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் சுற்றுச் சூழல் பொறியியல் புத்தாக்கப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்று பினாங்கின் நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

மாணவர்கள் தனுசியா விஜயன்,நிரஞ்சனா நாகேந்திரன்,சர்வினி அகிலன்,சர்வேஸ் வாசுதேவன்,சந்தோஸ் இளங்கோவன் ஆகியோர் Eco Mini Pot ஆய்வில் ஒரு தங்கப்பதக்கம் வென்றனர். Eco Ayurvedic Herbal Smoke ஆய்வில் மாணவர்கள் கஸ்வினி கோவிந்தராஜூ, நெதாலி ராஜ் எல்பர்ட் ராஜ்,லினேஷா
சுதாகர்,முவணன் மதிவாணன்,இலக்கியா துரைசிங்கம் ஆகியோர் மற்றொரு தங்கப்பதக்கத்தையும் வென்றனர். இப்போட்டியில் மொத்தம் 21
நாடுகளிலிருந்து 288 குழுக்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.