
பல விதமான இன்னல்களுடன் வாழ்ந்து வரும் இந்தியக் குடும்பத்துக்கு
மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தேசியத் தலைவர் டேவிட் மார்ஷெல்
உதவிக்கரம் நீட்டினார்.
பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் தாமான்
மெராக் குடியிருப்பில் சிறு நீராக பாதிப்பால் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை
மேற்கொண்டு வரும் ஆனந்தாவை நேரில் சந்தித்து ஆறுதல்
கூறியதோடு,பொருளுதவியும்,300 நிதியுதவியும் வழங்கினார்.ஒரு தடவை சிகிச்சைக்கு 170வெள்ளியென,வாரத்திற்கு மூன்று முறை அவர் இரத்த சுத்திகரிப்பை செய்துக் கொண்டு வருகிறார் என டேவிட் மார்ஷெல்
கூறினார்.
மேலும் சிகிச்சைகக்கான செலவை சமாளிக்க சமூகநல இலாகாவின் மூலம் உதவி கிடைக்க பேராசிரியர் பி.இராமசாமி முன்வந்துள்ளார் என செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். தொழிற்சாலையொன்றில் வேலை செய்து வரும் ஆனந்தாவின்
மனைவி சுப்புலட்சுமி குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை கவனித்து
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.உதவிகள் வழங்க எண்ணம் கொண்டுள்ள
அரசுசாரா இயக்கங்களும் தம்முடன் தொடர்புக் கொள்ளலாம் என்றார்.