
பேரா கமுண்டிங் ராயா தொழில்பேட்டை பகுதியில் எம்சிஓ விதிகளை மீறி செயல்பட்டு வந்த கையுறை தொழிற்சாலை நிர்வாகத்துக்கு 25 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதோடு,தொழிற்சாலையை இழுத்து மூடவும் உத்தரவிடப்பட்டது.
அரசாங்கத்தின் விதியை மீறி 60 விழுக்காட்டுக்கு மேலாக தொழிலார்களை வேலை செய்ய அனுமதித்த குற்றத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தைப்பிங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் கூறினார்.
மேலும் தொழிற்சாலையில் நோய் தொற்றிய உண்மையான பகுதி,நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தைப்பிங் சுகாதார இலாகாவிடம் வழங்கவில்லையெனவும் அவர் சொன்னார்.
நேற்று தொடங்கி ஜூன் 27 -ஆம் தேதி வரையில் தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலும் கூறினா