29.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

அம்னோவின் 14 நாள் அவகாசம்; மஇகா பின்பற்றாது!

🔥 Views : 11
👁 Reading Now : 22

இன்று தொடங்கி 14 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டும்படி அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 14 நாட்களில் கண்டிப்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறார்.
இதுபற்றி கருத்துரைத்த டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன், அம்னோவின் 14 நாட்கள் கால அவகாசத்தை மஇகா பின்பற்றாது என்றார்.
சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அரசாங்கத்திடம் விட்டுவிடுகிறோம் என்றார்.
இதுபற்றி கருத்துரைத்த மசீச செயலாளர் சோங் சின் வூன், சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles