25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இவ்வாண்டு இறுதியில் பொதுத்தேர்தலா?

🔥 Views : 10
👁 Reading Now : 42

இவ்வாண்டு இறுதியில் நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் நடைபெறலாம் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோடிக்காட்டினார்.
இதனை ஜோகூர் மாநில உச்சமன்ற உறுப்பினரும் மாநில முன்னாள் மந்திரி புசாருமான டத்தோ ஒஸ்மான் சாபியான் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 16 -ஆம் தேதி இணையம் வழியாக நடைபெற்ற பெர்சத்து கட்சியின் மாநிலக் கூட்டத்தில் அதன் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் தெரிவித்தாக அவர் சொன்னார்.
உண்மையாக சிந்தித்துப் பார்த்தால் செப்டம்பர் அல்லது
அக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறலாம்.காரணம் அக்டோபரில் வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது,
அப்படி நாடாளுமன்றம் செயல்படாவிட்டால் நாட்டின் நிதி கிடையாது.
ஆகையால் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிப்பது முக்கியம் என கூட்டத்தில் பேசப்பட்டதாக டத்தோ ஒஸ்மான் சாப்பியான் தெரிவித்தார்.
மேலும் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு முற்பகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதால்,அதற்கு ஏற்பாடுகளை செய்ய கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டதாகவும் ஜோகூர் மாநில பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் செனட்டர் முகமட் நசீர் ஹாசிம் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலை நடத்துவது எப்போது என்பது அமலாக்க அதிகாரிகளின் அறிக்கைகளில் தான் உள்ளது எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles