27.9 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

ஐரோப்பாவின் 50 லட்சம் தடுப்பூசிகளுக்கு என்ன நேர்ந்தது?

🔥 Views : 33
👁 Reading Now : 57

மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக ஐரோப்பா கூறிய 50 லட்சம் தடுப்பூசிகளின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கோவிட் தடுப்பூசிகளை ஏகபோகப்படுத்துவதாகக் கூறிய கைரியின் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மிச்சாலிஸ் ரோகாஸ் மறுத்துள்ளார் என்று ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
“கைரி குற்றம் சாட்டியது போல், ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசியை ஏகபோகப்படுத்தவில்லை என்றால், அந்த 50 லட்சம் தடுப்பூசிகளுக்கு என்ன நேர்ந்தது,
அது எவ்வாறு மலேசியர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய முக்கியமான கேள்விகள் எழுகின்றன,” என்று லிம் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles