25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் அம்னோ எம்பிக்கள் ஆர்வமாக உள்ளனர்

🔥 Views : 9
👁 Reading Now : 31

பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் 4 அம்னோ எம்பிக்கள் ஆர்வமாக இருப்பதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்
நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் 4 அம்னோ எம்பிக்கள் மட்டுமே அதனை ஆதரிப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்
அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, அம்னோ செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் மற்றும் மாச்சாங் எம்பி டத்தோ அமாட் ஜஸ்லான் ஆகியோர் மட்டுமே அரசாங்கத்தை கவிழ்ப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்றார் அவர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆதரவாக இருக்க மாட்டார்.
புதிய பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருவதற்கு அம்னோ ஜசெகவுடன் ஒத்துழைப்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles