25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இஷாமூடின் புதிய பிரதமரா? கடிதம் தொடர்பில் போலீசார் விசாரணை

🔥 Views : 9
👁 Reading Now : 53

நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் வகையில் மாமன்னருக்கு டத்தோஸ்ரீ இஷாமுடின் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ஹாரி தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ இஷாமுடின் பத்திரிகை செயலாளர் முகமட் ஹெபிஸ் இது தொடர்பில் டாங் வாங்கி மாவட்ட போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு தகவல் பல்லூடக சட்டம் 233 பிரிவின் கீழ் போலீசார் விசாரணை கோப்புகளைத் திறந்து இருப்பதாக அவர் சொன்னார்.
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க டத்தோஸ்ரீ இஷாமுடினுக்கு 25 தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாக கூறப்பட்டது.
இதை டத்தோஸ்ரீ இஷாமுடின் தரப்பு மறுத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles