26.5 C
Kuala Lumpur
Saturday, May 2, 2026

Vetri

பெரிக்காத்தான் அரசு அதன் தோல்விக்கு பொறுப்பேற்குமா?முன்னாள் அமைச்சர் குலா கேள்வி

கோவிட் தடுப்பூசியை கையாளும் விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் பதில் சொல்லியாக வேண்டும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படாததால் ஜுன் 20ஆம் தேதி வரையில் மலேசியாவில் கோவிட் 19இன் தாக்கம் திடுக்கிடும் வகையில் உயர்ந்து 696,408 ஐ எட்டியுள்ளது .
இதில் மரண எண்ணிக்கை 4,408 ம் அடங்கும் .
• தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தில் காலந்தாழ்த்தி செயல் பட்டதால் , மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வாங்குவதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா மிகவும் பின் தங்கி இருக்கிறது.
ஜுன் 19 ந் தேதி வரை முதல் கட்ட தடுப்பூசி 42 லட்சம் பேருக்கும் இரண்டாவதுக் கட்ட தடுப்பூசி 16 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது . இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆகும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles