25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஆகஸ்ட் 23இல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத் தொடர் !

🔥 Views : 7
👁 Reading Now : 67

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அனுமதி வழங்கி இருப்பதாக சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லீ தெரிவித்தார்.
சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அனுமதி வழங்கியிருப்பதாக அரண்மனை செயலாளர் முகமட் முர்னி கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்
மேலும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தொடரை சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் சபாநாயகர் இங் சுய் லிம் தெரிவித்தார்.
இவ்வேளையில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles