25.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு 20,000 நிதி உதவி

🔥 Views : 8
👁 Reading Now : 25

நோய்த்தொற்றுப் பாதிப்பிலிருந்து மீண்டும் சுற்றுலா நடவடிக்கைளை தொடர்வதற்கு ஏதுவாக சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிலாங்கூர் அரசு இருபதாயிரம் வெள்ளி வரை உதவி நிதி வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்பாடு செய்யும் அத்தொழில்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லீ லோய் சியான் கூறினார்.
இத்தகைய நடவடிகைகளின் வாயிலாக மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட முடியும் என நம்புகிறோம். இந்நோக்கத்திற்காக கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles