25.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மின்னியல் கல்வி முறையால் மாணவர்களும் ஆசிரியர்களும் மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர்!

🔥 Views : 8
👁 Reading Now : 21

கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்று நோய் பரவ ஆரம்பித்தது முதல் நாட்டில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகூடங்களும் கல்லூரிகளும் மின்னியல் முறையில் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.
காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை பல இடைநிலை பள்ளிகளில் நடைபெறுகின்ற இந்த மின்னியல் வகுப்புகள் நீண்ட நேரம் நடைபெறுவதால் ஆசிரியர்களும் மாணவர்களும் மன உளைச்சல்களுக்கு ஆளாவதாக மனோவியல் பட்டதாரியான திரு ஆ.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தை தன்னுடன் பகிர்ந்த சில ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நேரடி சந்திப்பு நடத்திய பிறகு தன்னுடைய இந்த கருத்தை ஏஎஸ்டி செய்திக்கு பகிர்வதாக சந்திர சேகரன் ஆறுமுகம் கூறிப்பிட்டார்.
நம் நாட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறை கல்வி முறையில் அனுபவபட்டு, அந்த முறையில் கல்வி கற்று வந்தவர்கள் எனவே இந்த மின்னியல் முறை என்பது அவர்களின் மனோநிலைக்கு இன்னும் ஏற்புடையதாக அமையவில்லை என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும்,கல்லி அமைச்சு தற்போதையை அமுலில் இருக்கும் இந்த நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து படிக்கும் முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த விவகாரத்துக்கு ஒரு முறையான தீர்வு காணவில்லை என்றால் மன ரீதியாகவும் உடல் ரீதியான விளைவுகளினால் இந்த இரண்டு தரப்பு மட்டும் அல்லாமல் பெற்றோர்களுடன் நாடும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles