25.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 47

நாட்டில் அனைத்து மொழி பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு கல்வியமைச்சு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கேட்டுக்கொண்டார்
ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க 18 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
அந்த வகையில் தமிழ், சீனம் உட்பட அனைத்து மொழி பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும் என்று எதிர்பார்க்கிறேன்
குறிப்பாக இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பாடங்களை போதிக்க போதுமான தமிழ் ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமிக்க வேண்டும் என்று கேசவன் கேட்டுக்கொண்டார்.
தமிழ்ப் படங்களை போதிப்பதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் இதை கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles