34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

நெகிரி மாநிலத்தில் மூன்று ஆலயங்களுக்கு 70,000 வெள்ளி மானியம்!

🔥 Views : 7
👁 Reading Now : 65

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று ஆலயங்களுக்கு மாநில அரசாங்கம் சார்பில் எழுபதாயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் தலைமையில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் முயற்சியால் மூன்று ஆலயங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.
செனாவாங் தாமான் துங்கு நஜிஹாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 30,000 வெள்ளி வழங்கப்பட்டது.
சுங்கை செண்டையான் வேட்கை காளியம்மன் ஆலயத்திற்கும் ரந்தாவ் லின்சுன் தோட்ட மகா மாரியம்மன் ஆலயத்திற்கு தலா 20,000 வெள்ளி வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநில பக்கத்தான் அரசாங்கம் இந்து கோயில்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மானியத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles