28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

டெல்டா நோய்த்தொற்று தாக்கம்; மலேசியர்களுக்கு 3ஆவது தடுப்பூசி திட்டம்!

🔥 Views : 9
👁 Reading Now : 56

டெல்டா வகை நோய்த் தொற்றுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகளின் ஆக்கத் தன்மை குறித்து மலேசியா ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம், நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவது குறித்தும் அது ஆராய்ந்து வருகிறது.
ஆக்கத்தன்மை அதிகரிப்புக்காக மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதன் அவசியம் குறித்து ஆராய்ந்து வரும் வளர்ந்த நாடுகள் அடுத்தாண்டிற்கான தேவைக்காக இப்போது தொடங்கி தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற விரிவாக தரவுகளை நாம் பெற வேண்டியுள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது டோஸ் தடுப்பூசித் திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டி வரும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles