
நாட்டில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. வாடிக்கையாளர்களுக்கு பொட்டலங்கள் மூலம் உணவுகள் வாங்கி செல்ல மட்டுமே அனுமதி என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர் சொன்னார்.
மக்கள் நடமாட்டம் உத்தரவால் உணவகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரம் 80 விழுக்காடு பாதித்து விட்டது.

ஆகவே அரசாங்கம் எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
SOP விதிமுறைகளை பின்பற்றி ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.



