
கெராக்கான் கட்சியின் திருப்திகரமான அன்பு திட்டத்தின் கீழ்,சிரமத்தில் வாழும் பி40 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த உதவிப் பொருட்கள்,கோவிட் -19 தொற்றின் பாதிப்பால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் சிரமப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக கட்சியின் தேசியத் துணை துணை சபாநாயகர் பிரபாகரன் தெரிவித்தார்.
அன்றாட வாழ்க்கை சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமானோர் இந்த இத்திட்டத்தில் உதவிகளைப் பெற்று பயனடைந்தனர்.
தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தில் கட்சித் தொண்டர்களும் இந்த திட்டம் வெற்றிப் பெற கடுமையாக பாடுபட்டுள்ளனர் என்றார்.மேலும் பத்து நாடாளுமன்றத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 148 தொகுதிகளில் 71 குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கும் உதவிகளை வழங்கியதாக கெராக்கான் வங்சா மாஜூ தொகுதித் தலைவருமான அவர் தெரிவித்தார்.



