25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வெ 78 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகிரெட்டுகள் பறிமுதல்

🔥 Views : 9
👁 Reading Now : 58

இங்கு மத்திய செபராங் பிறை,புக்கிட் தெங்கா மாச்சாங் புபோக் குடியிருப்புப் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 78 லட்சம் வெள்ளி மதிப்பிலான பல்வகை கடத்தல் சிகிரெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 18 வயதிலிருந்து 38 வயதுக்குட்பட்ட 12 ஆடவர்களையும் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் காலை 10 .30 மணி முதல் நண்பகல் 12 .30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 236 ,000 வெள்ளி மதிப்புள்ள 9
கார்களையும் பறிமுதல் செய்ததாக பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ சஹாபுடின் அப்துல் மனான் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட அணைத்து பொருட்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் வெள்ளி என கூறிய அவர்,கைது செய்யப்பட்ட 12 பேரில்,ஐந்து பேர் மீது போதைப்பொருள்,சூதாட்டம் மற்றும் சுங்கத்துறை சட்டக் குற்றச்செயல்களும் இருப்பதாக நேற்று மத்திய மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles