26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பரம ஏழைகள், பி40, எம் 40 மக்களுக்கு உதவித்தொகை

🔥 Views : 7
👁 Reading Now : 24

நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் 460 கோடி வெள்ளி மக்கள் பாதுகாப்பு உதவித் திட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
பரம ஏழைகளுக்கு மூன்று கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 500 வெள்ளி, நவம்பர் மாதம் 500 வெள்ளி மற்றும் டிசம்பர் மாதம் 300 வெள்ளி வழங்கப்படும் என்றார் அவர்.
திருமணம் ஆகாத பரம ஏழைகளுக்கு ஆகஸ்ட் மாதம் 200 வெள்ளி மற்றும் நவம்பர் மாதம் 300 வெள்ளி வழங்கப்படும்
பி 40 பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 500 வெள்ளியும் டிசம்பர் மாதம் 300 வெள்ளியும் வழங்கப்படும்.
இந்த பிரிவில் திருமணமாகாதவர்களுக்கு 200 வெள்ளி வழங்கப்படும்.
எம் 40 மக்களுக்கு 250 வெள்ளியும் திருமணம் ஆகாதவர்களுக்கு 100 வெள்ளியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles